"கோகோ மாக்கோ', இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொரு வருக்குமான படமாகக் கொண்டாடப்படும் வகையில், காதல், நகைச் சுவை மற்றும் இசை கொஞ்சம் தூக்க லாகவே இருக்கும்'' என்கிறார் இயக்குநர் அருண்காந்த்.

Advertisment

bhagyaraj

நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார். இவர் "துப்பறிவாளன்', "இரும்புத்திரை' ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர். நாயகியாக புதுமுகம் தனுஷா வுடன் "தரமணி' படத்தில் ஆன்ட்ரியா வுடன் நடித்த சாரா ஜார்ஜும் நடிக்கிறார்.

சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்ய, வினோத் ஸ்ரீதர் எடிட்டிங்கைக் கையாண்டிருக்கிறார்.

Advertisment

இன்ஃபோ புளுட்டோ மீடியா வொர்க்ஸ் தயாரிக்க, ரூஃப் ஸ்டுடியோஸில் படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள் நடந்திருக் கின்றன.

முற்றிலும் புதியவர்களை வைத்து, புதியவர்களால் உருவாக்கப்பட்ட "கோகோ மாக்கோ'-வை வாங்க விநியோகஸ்தர்களோ திரையரங்கு உரிமையாளர்களோ முன்வராத நிலையில், படத்தின் இயக்குநர் டிக்கெட் முன்பதிவுக்கான பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தி யிருக்கிறார். www.arunkanth.inஎன்கிற இணையத்தில் சென்று, உங்களது அருகிலுள்ள திரையரங்கில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

பிப்ரவரி 14, 2019 படம் குறித்த நாளில் வெளியாகவில்லை என்றால், முழுப்பணமும் திரும்பிவந்துவிடும். அல்லது வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று விரும்பினால், டிக்கெட் விலையான 150 ரூபாயில் 100.ரூ திரும்பப் பெற்றுக்கொண்டு 50 ரூபாயில் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்'' என்கிறார் அருண்காந்த்.